மயிலம்:மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோவிலில் திருப்படி விழா நடந்துது.விழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு அக்னி குளக்கரையிலுள்ள சுந்தர வினாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், பாலசித்தருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்திலுள்ள திருப்படிகளை சுத்தம் செய்து மஞ்சள், கும்குமம் வைத்து சுடம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர்.தொடர்ந்து மயிலம் தமிழ் கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் திருநாவுக்கரசு திருப்படி விழாவை துவக்கி வைத்தார். மேலமங்கலம் குமாரசாமி தம்பிரான் சுவாமி, திருவெண்ணைநல்லூர் அம்பலவான தம்பிரான் சுவாமி, அப்பர் சுவாமி மடத்தை சேர்ந்த சிவஞான தேசிக சுவாமி முன்னிலை வகித்தனர். கவிஞர் கண்ணப்பன் வரவேற்றார்.பின்னர் மயிலம் ஆதினம் 20ம் பட்ட சுவாமிகள் வழிபாட்டில் கலந்து கொண்டார். விழுப்புரம் தமிழாசிரியர் நாகராஜ் திருப்புகழ் அனுபூதி என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, கண்டாச்சிபுரம் தமிழ் வேத வழிபாட்டு குழுவினரின் கோலாட்டம், காவடியாட்டம், பஜனைக் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது.