பதிவு செய்த நாள்
26
ஜூலை
2018
12:07
கோவிந்தவாடி : கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு, 10 லட்சத்து, 87 ஆயிரத்து, 725 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியத்தில், குரு கோவில் என, அழைக்கப்படும் கைலாச நாதர் சமேத தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இங்குள்ள உண்டியல்கள், நேற்று முன்தினம், உதவி ஆணையர்கள் ரமணி, சுப்ரமணி முன்னிலையில் திறக்கப்பட்டன. இதில், 10 லட்சத்து, 87 ஆயிரத்து, 725 ரூபாய் கிடைத்துள்ளது. 18 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளிப்பொருட்களும் கிடைத்துள்ளன. இதை, கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன், பொறுப்பு ஆய்வாளர் அலமேலு ஆகியோர் வங்கியில் செலுத்தினர்.