பதிவு செய்த நாள்
26
ஜூலை
2018
12:07
மதுராந்தகம் : மாரிபுத்துார் கோவில் தேர் திருவிழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மதுராந்தகம் அடுத்த, மாரிபுத்துார் பிடாரி செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆடி மாதந்தோறும், இத்திருவிழா நடைபெறும். மதுராந்தகம், செய்யூர் தாலுகா மக்கள் மட்டுமல்லாது, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பக்தர்கள் பங்கேற்று, பிடாரி அம்மனை தரிசிப்பர்.மாட்டு வண்டி, கட்டை வண்டிகளில், குடும்பம் குடும்பமாக வருவோர், அங்கேயே சமைத்து, அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர்.கோவிலுக்குள் நுழைவது முதல், அர்ச்சனை முடித்து வெளியேறும் வரை, குறைந்தது, 200 ரூபாய் வலுக்கட்டாயமாக, பல்வேறு தரப்பினரால் வசூலிக்கப்பட்டதாக, பக்தர்கள் குமுறுகின்றனர்.