மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருவிழாவையொட்டி இனறு (ஜூலை 27) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுந்தரராஜப்பெருமாள் தங்கப் பல்லக்கில் காலை, மாலை அன்ன, சிம்ம, அனுமார், கருட மற்றும் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (27ம் தேதி) காலை 6:00 மணிக்கு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நிறைவாக ஆக., 11ல் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். விழா நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாச்சலம், துணை கமிஷனர் மாரிமுத்து செய்து வருகிறார்கள்.