பதிவு செய்த நாள்
27
ஜூலை
2018
11:07
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவில் அருகே, ஊர் எல்லை தெய்வமான வேம்புலி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் இன்று காலை, 7:30 மணி அளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று. காலை, 10:00 மணி அளவில் முத்தங்கி சேவையும், மாலை, 5.30 மணி அளவில் வேம்புலி அம்மன் மற்றும் திருக்காளியம்மனுக்கும் குங்குமம் காப்பிட்டு தீப அலங்காரத்துடன் ஆராதனை நடைபெறும். இக்கோவிலில் ஜாத்திரை, செப்., 7ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை, 10 நாட்கள் விழா நடைபெறும் செப்.2ம் தேதி காலை வேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டி, அம்மனை அழைத்துக் கொண்டு தாய் வீட்டில் போய் சேர்வார்கள்.
திருவள்ளூரை சார்ந்த, மதுரா கிராமமாகிய எடப்பாளையத்திற்கு முதல் ஐந்து நாட்கள் புறப்பாடு நடைபெற்று, 5ம் நாள், செப். 11ம் தேதியன்று, எடப்பாளையம கிராமமக்கள் கூழ் வார்த்து, சிறப்பு பூஜை செய்வார்கள் 7ம் நாள், செப். 13ம் நாள், திருவள்ளூர் நகர் மக்கள் கூழ்வார்த்தல் நடைபெறும். செப்., 15ம் தேதி 9ம் நாள் தகனிக்கோட்டையில் கூழ்வார்த்தல் நடைபெறும். செப். 16ம் தேதி 10ம் நாள் மஞ்சள் நீராட்டு நடைபெற்று, மாலை 4:00 மணி அளவில் வேம்புலி அம்மன், வள்ளுவர்புரம் அகரம் கிராம மககளின் படையலை ஏற்கும் நகர் வலத்தில் ஒரு பகுதியான திலகர் தெருவில் உள்ள குசம்மாளை அழைத்து கொண்டு வருவர். பின், மண்ணடியில், வீரண்ணன் தெருவில் திருவள்ளூர் நகர ஊர் படையலிட்டு கலைத்து, செப். 17ம் தேதி, காலை 7:00 மணி அளவில், வேம்புலி அம்மன் கோவில் வந்தடையும். அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் வேம்புலி அம்மன் சேவா சங்கம் விழா குழுவினர்கள் மற்றும் திருவள்ளூர் கிராமத்தார்கள் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.