பதிவு செய்த நாள்
27
ஜூலை
2018
11:07
உடுமலை: உடுமலை, தில்லை நகர் ஆனந்த சாய்பாபா கோவிலில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை, தில்லை நகரில் உள்ள ஆனந்த சாய்பாபா கோவில் ஆண்டு விழா, நேற்று துவங்கியது. விழாவையொட்டி, சிறப்பு பூஜைகளும் நடந்தது. காலையில் கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், ஆஞ்சநேயர் ேஹாமங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து, அபிேஷக, ஆராதனை நடந்தது. காலை, 11:00 மணிக்கு, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், சாய்சத்சரிதம் பாராயணம் செய்தனர். மாலையில், சீரடி ஆனந்த சாய்பாபா அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளிகளில், கடந்தாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி, காலையில், பள்ளி மாணவர்களின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, மாலையில் இசைக்குழுவினரின் சாய் பஜன் நிகழ்ச்சியும் நடந்தது. அறக்கட்டளை சார்பில், இன்று, காலை 10:00 மணி முதல் குருபூர்ணிமா உற்சவம் ருத்ரப்ப நகர், ஜி.டி.வி., மண்டபத்தில் நடக்கிறது.