பதிவு செய்த நாள்
27
ஜூலை
2018
12:07
திருப்பதி, திருமலையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, வைகுண்டம் காத்திருப்பு அறைகள், நேற்று மாலையுடன் மூடப்பட்டன.இன்று இரவு முதல், நாளை அதிகாலை வரை, முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதையடுத்து, இன்று மாலை, 5:00 மணி முதல், நாளை காலை, 4:15 மணி வரை, ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது.கோவிலை சுத்தப்படுத்திய பின், நாளை காலை, 7:00 மணி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி, நேற்று மாலை, 6:00 மணிக்கு, வைகுண்டம் காத்திருப்பு அறைகளை மூட, தேவஸ்தானம் உத்தரவிட்டது.இன்று, வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், கோவில் நடை சாத்தப்படும். அதற்கு பின், நாளை காலை, 4:00 மணிக்கு, மீண்டும் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் திறக்கப்பட்டு, பக்தர்கள் காத்திருப்பு அறையில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.மேலும், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று முழுவதும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான தரிசனத்தை, அதிகாரிகள் ரத்து செய்தனர்.