தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ஆடித்தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2018 02:07
திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடித்பெருந்திருவிழா ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் மாலையில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. ஆடிப் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஜூலை 27ல்) காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.