பதிவு செய்த நாள்
27
ஜூலை
2018
01:07
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கண்ணுடையான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நல்லாண்டவர் வகையறா கோயில்களில் ஆடி வெள்ளிப் பெருந்திருவிழா ஆடி முதல் வெள்ளி முதல் - ஆடி ஐந்தாம் வெள்ளி வரை (20.07.2018 முதல் 17.08.2018 வரை) நடைபெற உள்ளது.
மான்பூண்டி, மாம்பூண்டி (மாமுண்டி), இலக்கையன், சாலைக்கரையான், நல்லையன், நல்லுச்சாமி, நல்லேந்திரன், இராஜகோபாலன் முதலிய பெயர்களைத் தாங்கி இத்திருத்தலத்தின் முதன்மைக் கடவுளாகக் கோலோச்சி வரும் குலதெய்வம் ஆடி விழா நாயகன் அருள்மிகு மாமுண்டி நல்லாண்டவர் கோயில் ஆடி வெள்ளித் திருவிழா 20.7.2018 அன்று - அதிகாலை 5.00 மணியளவில் கணபதி வேள்வியுடன் தொடங்கி, ஆவணித்திங்கள் முதல் நாள், 17.8.2018, ஆடி ஐந்தாம் வெள்ளியுடன் நிறைவு பெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
27.07.2018 ஆடி இரண்டாம் வெள்ளி
மங்கல நாள்: முழுநிலா நாள் (பவுர்ணமி திதி), கடைக்குளம் (உத்திராடம்) விண்மீன், சித்தஓகம் கூடிய இறைமங்கல வேளை.
நறுமண நீராட்டு: காலை 9 மணி உற்சவமூர்த்தி அருள்மிகு மான்பூண்டி நல்லாண்டவர் மற்றும் அருள்மிகு ஏழு கருப்பண்ணசாமிகளுக்கு நன்னீராட்டு -பேரொளி வழிபாடு.
மங்கல இசை: மாலை 6.00 மணி “நாகக்குழலிசை நாயகன்” ஆண்டவர்கோயில் சீனி. இராமகிருஷ்ணன் குழுவினர்.
உட்சுற்று உலா: இரவு 7.00 மணி தெய்வத்திருமகன் மாம்பூண்டி லெக்கையன் திருத்தேரில் உட்சுற்று உலா யாவருக்கும் இறையமுதம் வழங்கல்.
03.08.2018 ஆடி மூன்றாம் வெள்ளி விழா
மங்கல நாள்: பிறைநிலா ஆறாவது - ஏழாவது நாள் - தோணி (ரேவதி - புரவி (அசுவனி) விண்மீன்கள் - அமிர்த ஓகவேளை.
மங்கல நீராட்டு: காலை 9.00 மணி உற்சவமூர்த்தி அருள்மிகு நல்லாண்டவர் மற்றும் காவல்தெய்வம் அருள்மிகு ஏழுகருப்பண்ணசாமிகளுக்கு மங்கல நீராட்டு -பேரொளி வழிபாடு.
பொது விருந்து: பகல் 12.00 மணிக்கு அன்னதானம்
மங்கல இசை: மாலை 6.00 மணி “மங்கல இசை மைந்தன்” ஆண்டவர்கோவில் சீனி. இராமகிருஷ்ணன் குழுவினர்.
உட்சுற்றுவிழா: இரவு 7.00 மணி நமது குலதெய்வம் இராஜகம்பளத்து நாயகன் மாம்பூண்டி நல்லாண்டவர் திருத்தேரில் உட்சுற்று உலா. யாவருக்கும் இறையமுதம் வழங்கல்.
03.08.2018 ஆடிப் பதினெட்டாம் பெருக்கு விழா
மங்கல நாள்: பிறைநிலா ஆறாவது - ஏழாவது நாள் - தோணி (ரேவதி)- புரவி (அசுவினி) விண்மீன்கள் - அமிர்த ஓகவேளை.
புனித நீராட்டு: காலை 9.00 மணி
உற்சவமூர்த்தி அருள்மிகு மான்பூண்டி லெக்கையன் மற்றும் காவல்தெய்வம் அருள்மிகு ஏழுகருப்பசாமிகளுக்குப் புனித நீராட்டு -பேரொளி வழிபாடு.
மங்கல இசை: மாலை 6 மணி “மங்கல இசை மாமணி” ஆண்டவர்கோயில் எம்.எஸ். கிருஷ்ணன் குழுவினர்.
உட்சுற்று உலா: இரவு 7.00 மணி மாமுண்டிச்சீமை மாமன்னன் அருள்மிகு நாடுபோற்றும் மாமுண்டி நல்லையன் மலர்த்தேரில் உட்சுற்று உலா - அனைவருக்கும் இறையமுதம் (அருட்பிரசாதம்) வழங்கல்.
10.08.2018 ஆடி நான்காம் வெள்ளிப் பெருந்திருவிழா
மங்கல நாள் :பிறைநிலா பதிநான்காம் நாள் (சதுர்த்தசி திதி) - முழு இரவு நாள் (அமாவாசைத் திதி), கொடிறு (பூசம்) விண்மீன் புடைசூழும் புனிதமிகு நாள்.
சிறப்புமிகு வழிபாடு: காலை 9.00 மணி அருள்மிகு உற்சவமூர்த்தி மாம்பூண்டி லெக்கையன் மற்றும் காவல்தெய்வம் அருள்மிகு ஏழுகருப்பசாமிகளுக்கு நறுமண மங்கல நீராட்டு -பேரொளிவழிபாடு.
பொதுவிருந்து: பகல் 12.00 மணிபத்தில் சிறப்புமிகு பல்சுவை அன்னதானப் பொதுவிருந்து.
மங்கல இசை: மாலை 6.00 மணி “நாகக்குழுலிசைத் திலகம்” ஆண்டவர்கோவில். சீனி. இராமகிருஷ்ணன் குழுவினர்.
கேரள மங்கல இசை: இரவு 8.00 மணி “மலையாள நாட்டு மங்கல இசை நாயகன்” ஜெண்டைமேளம் கொல்லங்கோடு கு.சசி குழுவினர் வழங்கும் மங்கல இசை.
தமிழ்நாட்டுக் கலைவிழா: இரவு 9.00 மணி “நாட்டுப்புறக்கலை நாயகம்” “கலைமாமணி”
திருக்கோவில் தெய்வங்கள் திருவீதித் திருஉலா: நள்ளிரவு 2.30 மணி குதிரை வாகனத்தில் திக்கெட்டும் வணங்கும் இராஜகம்பளத்து மாமன்னன் மாம்பூண்டி நாயகனின் திருவீதி உலா மற்றும் மின்னொளி வீசும் அழகுமிகு அலங்கார முத்துப் பல்லக்கில் திருக்கோயில் தெய்வங்களின் கோயில் வெளிச்சுற்று உலா. கவின்மிகு வானப்பெருவெளியில் கண்களுக்கு விருந்தளிக்கும் காணக்கிடைக்காத வாணவேடிக்கை.
17.08.2018 ஆடி ஐந்தாம் வெள்ளி விழா: 30 வது ஆண்டு மண்டகப்படி
இனிய நாள்: வளர் நிலா ஆறாம் நாள், சித்த ஓகம், விளக்கு (சுவாதி) விண்மீன் கூடிய இறைமங்கல வேளை.
நறுமண நீராட்டு: காலை 9.00 மணி அருள்தரும் உற்சவ மூர்த்தி ஞாலம் போற்றும் மான்பூண்டி நல்லாண்டவருக்கும் மற்றும் காவல்தெய்வம் அருள்மிகு ஏழுகருப்பண்ண சாமிக்கும் புனிதமிகுப் பொருட்களால் நறுமண மங்கல நீராட்டு, பேரொளி வழிபாடு.
மங்கல இசை: மாலை 6.00 மணி“நாகக்குழலிசை நாயகம்” மலேசியா புகழ் எம்.எஸ்.கே. மருதமுத்து குழுவினர், ஆண்டவர்கோவில்.
உட்சுற்று உலா: இரவு 7.00 மணி அருள்மிகு உற்சவமூர்த்தி மாமுண்டி லெக்கையன் கோயில் உட்சுற்று இரத உலா. அனைவருக்கும் இறையமுதம் எனும் அருட்பிரசாதம்.
02.09.2018 கோகுலாஷ்டமி உறியடித் திருவிழா
இனிய நாள்: ஆவணித் திங்கள் 17ம் நாள் / 02.09.2018/ ஞாயிற்றுக்கிழமை/ பிறைநிலா 7-8 ஆம் நாள் எனும் சப்தமி - அஷ்டமி திதி, ஆரல் (கார்த்திகை) - சகடு (ரோகிணி) விண்மீன் சித்த ஓகம் கூடிய இறைமங்கல வேளை.
மங்கல இசை: மாலை 6.00 மணி “நாகக்குழல் இளவரசன்” ஆண்டவர்கோவில் சீனி. இராமகிருஷ்ணன் குழவினர்
உறியடித் திருவிழா: இரவு 7.00 மணி அருள்மிகு கலியுகக் கண்ணன் பிறந்த நாளில் உறியடித் திருவிழா வழக்கு மரம் ஏறுதல் கொண்டாட்டம்.
திருக்கல்யாணம்: இரவு 8.00 மணி தெய்வத்திருமகளிர் பாமா ருக்மணி ஆகிய இணையர் இருவரையும் ஒரு சேர இறைவன் கண்ணன் மணந்து மகிழும் தெய்வங்களின் திருக்கல்யாண மங்கல விழா, அனைவருக்கும் இறையமுதம்.
தொடர்புக்கு : இராணி உதவி ஆணையர், கல்யாணி இணை ஆணையர், பிரபாகர் செயல் அலுவலர், விஜயகுமார் ஆய்வர், முத்துவீர லெக்கைய நாயக்கர், பரம்பரை அறங்காவலர்