நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2ம் வெள்ளியை முன்னிட்டு செடல் திருவிழா இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கெடிலம் ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து வந்து சாகை வார்த்தல் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு அம்மன் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து செடல் திருவிழா நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.