மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் சுவாமியும் அம்பாளும் சிம்மாசனம் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி சன்னதியில் காலை 10.05 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இரவில் அம்மன் சிம்ம வாகனத்திலும், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், நான்கு சித்திரை வீதிகளில் எழுந்தருளினர். தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தெப்பத்திருவிழா பிப்., 7ல் மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடக்கிறது.