வேலூர்: வேலூர் சேண்பாக்கம், சந்தான ஈஸ்வரி சக்கர மகா பீடத்தின் சார்பில், நேற்று, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. சேண்பாக்கம் செல்வவிநாயகர் கோவிலில் இருந்து, புறப்பட்ட ஊர்வலத்தை, பீடம் மேலாளர் புருஷோத்தமன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, சந்தான ஈஸ்வரிக்கு, பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.