நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2012 11:01
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. திருவிழாவின் 4ம் நாளான வரும் பிப்.1ம் தேதி "திருநெல்வேலி எனப் பெயர் வரக் காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருநாள் கொண்டாடப்படுகிறது. இரவு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. 7ம் தேதி தைப்பூசம் தீர்த்தவாரி விழா கைலாசபுரம் தீர்த்தவாரி சிந்துபூந்துறை மண்டபத்தில் நடக்கிறது. 8ம் தேதி சவுந்திர சபையில் நடராஜர் திருநடனம் காட்சியும், 9ம் தேதி நெல்லையப்பர் வெளித் தெப்பத்தில் பஞ்சமூர்த்திகளுடன் தெப்ப உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கணபதிமுருகன் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.