பதிவு செய்த நாள்
30
ஜன
2012
11:01
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள சிறப்புபெற்ற, செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம், 24 ஆண்டிற்குப்பின் நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, கடந்த 25ம்தேதி யாகசாலை பூஜை துவங்கியது. சிறப்பு பூஜைகளுக்குப்பின், நேற்று காலை 9.05 மணிக்கு, தமிழக நிதிஅமைச்சர் பன்னீர்செல்வம் பச்சைக்கொடியசைக்க, வேதமந்திரங்கள் முழங்க, சுவாமி, அம்பாள் ராஜகோபுர விமான கலசம் மற்றும் பரிவாரமூர்த்திகளின் கலசங்களுக்கு, புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பரசுராம பட்டர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், அறநிலையத்துறை செயலர் ராஜாராம், அறநிலையத்துறை ஆணையர் சந்திரகுமார், தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார், எஸ்.பி.,ராஜேந்திரன், கோயில் செயல் அலுவலர் கசன்காத்த பெருமாள், உதவி ஆணையர் வீரராஜன், திருப்பணிக்குழுத் தலைவர் நாகஜோதி, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.