பதிவு செய்த நாள்
04
ஆக
2018
12:08
திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிபேட்டை, எல்லையம்மன் கோவில், 65ம் ஆண்டு ஆடி திருவிழா, நாளை நடைபெற உள்ளது. திருவொற்றியூர், காலடிபேட்டையில் உள்ள எல்லையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டின், 65ம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு, 1ம் தேதி, கெங்கை திரட்டல், பந்தக்கால் நடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன. 3ம் தேதி, பால்குடம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. நாளை அதிகாலை, அபிஷேக அலங்காரம், தீபாராதனை, உடுக்கை சிலம்பு வர்ணிப்பு, திருவிழாவின் முக்கிய நிகழ்வான கூழ்வார்த்தல் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. மாலையில், பூசாரிப்பாட்டும், இரவில், கும்ப பூஜை, அம்மன் திருவீதி உலா நடைபெறும்.எல்லையம்மன் கோவில் ஆடி திருவிழாவில் பங்கேற்க, திருவொற்றியூர் மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.