தொண்டி: தொண்டி அருகே காரங்காடு புனித செங்கோல் மாதாஆலய திருவிழா ஜூலை 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியாக 27 ல் செங்கோல் மாதா கோயில் கோபுர திறப்பு விழா நடந்தது அதனை தொடர்ந்து ஆக.2 இரவு தேர்பவனி நடந்தது. மெக்கேல்அதிதுாதர்,புனித அந்தோணியார், செங்கோல்மாதா ஆகிய 3 தேர்கள் முக்கிய வீதி வழியாக சென்றன.சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம், பாதி ரியார் சாமிநாதன் மற்றும் காரங்காடு கிராம மக்கள் கலந்து கொண்டனர்.