பதிவு செய்த நாள்
07
ஆக
2018
10:08
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரவிழாவின் முதல்நாளில் 16 வண்டி சப்பரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா நடந்தது.
நேற்று முன்தினம் இரவு 10:40 மணிக்கு கோயிலிலிருந்து புறப்பட்டு மாடவீதி, ராஜகோபுரம் வழியாக 16 வண்டி சப்பரத்திற்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் சப்பரத்தை வடம்பிடித்தனர். கோவிந்தா, கோபாலா கோஷம், கோலாட்டம், பக்தர்கள் நாமசங்கீர்த்தனையுடனும் 16 வண்டி சப்பரத்தில் வீதி உலா வந்தது. நள்ளிரவிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.