பதிவு செய்த நாள்
06
ஆக
2018
04:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை முன்னிட்டு, தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தெப்பத்தில் வள்ளி தெய்வானையுடன் முருக பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, 3ம் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. நேற்று, ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. மாலை, 6:30 மணிக்கு உற்சவர் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக சரவணபொய்கைக்கு வருகை தந்தார். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். தெப்பத்தில் உற்சவர் பெருமான் குளத்தை, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு வரை, ஒன்றரை லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.