வானுார்: கழுப்பெரும்பாக்கம் அருகே கன்னியனுார் மாரியம்மன் கோவிலில், 6ம் ஆண்டு திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வானுார் வட்டம், பெரிய கொழுவாரி சமத்துவபுரம் அருகே உள்ள ஸ்ரீ கன்னியனுார் மாரியம்மன் கோவில் ஆறாம் ஆண்டு ஆடிமாத உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை 9.30 மணிக்கு கோவில் வளாகத்தில் அம்மனுக்கு சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது.
கன்னியனுார் மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில், வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கோவில் அறக்கட்டளை நிர்வாகி சீனுவாசன் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.