பழநி : பழநி அருகே பெரியகலையம்புத்துார் மகாலட்சுமி கோயில் ஆடித்திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி நெய்க்காரப்பட்டி அருகேயுள்ள பெரியகலையம்புத்துார் மகாலட்சுமியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா ஆக.,9, 10 நடந்தது. முதல்நாள் அம்மன் அலங்காரபூத்தேரில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்புரிந்தார். நேற்று ஆடிகடைசிவெள்ளியை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சேர்வையாட்டம், கரகாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தது.நெய்க்காரப்பட்டி கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.