திருப்புத்தூர் கோயிலில் பக்தர்கள் பால்குடம், தீ மிதித்து பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2018 01:08
திருப்புத்துார் : திருப்புத்துார் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்தும்,பூக்குழி இறங்கியும்அம்மனை வழிபட்டனர். திருப்புத்துார் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியன்று காப்புக்கட்டி விழா துவங்கியது.வெள்ளி தோறும் அம்மனுக்கு பக்தர்களால் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்றுகாலை 9:00 மணிக்கு மேலத்திருத்தளிநாதர் கோயில் அருகே ராமர் மடத்திலிருந்து பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னிச்சட்டி ஏந்தியும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். கோயில் முன் உள்ள பூக்குழியில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பாலாபிேஷகம் நடந்து அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. மாலை 4:00 மணி முதல் நகரின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர்.