பதிவு செய்த நாள்
11
ஆக
2018
02:08
ஈரோடு: ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஈரோடு, வீரப்பன்சத்திரம் மஹாமாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா, ஜூலை, 20ல் தொடங்கியது. நேற்று, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. அதைத் தொடர்ந்து மூலவருக்கு பாலாபி?ஷகம், பட்டினி சாத விருந்து பூஜை, விவேக ?ஹாமம், பார்வதி பரமேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. அதைத் தொடர்ந்து மாலை நவசக்தி பூஜை, இரவு ஊஞ்சல் உற்சவம், தீபாராதனை நடந்தது.
* சென்னிமலை நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்கள் சார்பாக, 23ம் ஆண்டாக நேற்று மாரியம்மனுக்கு பால்குடம் அபி?ஷகம் நடந்தது. ஏரளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து, மாலையில் வழிபாடு நடத்தினர்.
* ஈங்கூர் வடிவுள்ள மங்கை சமேத அல்லாளீஸ்வரர் திருக்கோவிலில் குத்துவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜைகள் நடந்தது இதில், 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை நடத்தினர். வடிவுள்ள மங்கை சிறப்பு அல்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* சென்னிமலை, பிராட்டியம்மன் ஆலயத்தில், 1,008 அகல் விளக்கு தீப ஜோதியுடன் குத்துவிளக்கு பூஜை நடந்தது. 108 பெண்கள் பூஜைசெய்து அம்மனை வழிபட்டனர்.
* அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், சவுடேஸ்வரி அம்மன் கோவில், வேம்பத்தி சொக்கநாச்சியம்மன் கோவில் மற்றும் அந்தியூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
* அம்மாபேட்டை, காவிரி ஆற்றங்கரையோரத்திலுள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு, நேற்று ஆடி மாத கடைசி வெள்ளியை தொடர்ந்து தக்காளி, வெண்டைக்காய், வாழைக்காய், கேரட், பீட்ரூட், கத்தரிக்காய், முட்டைகோஸ், வெங்காயம், பச்சமிளகாய், பாவற்காய், சின்ன வெங்காயம் மற்றும் கனி வகைகளை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல், குருவாரெட்டியூர், ஊமாரெட்டியூர், சிங்கம்பேட்டை உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
* கோபி அருகே பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நேற்று குவிந்தனர். இதேபோல், கோபி சாரதா மாரியம்மன் கோவில், பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
* பவானி நகர மக்களின் காவல் தெய்வமான செல்லியாண்டியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், தேவபுரம் கருமாரியம்மன் கோவில், மேற்குதெரு மாரியம்மன் கோவில் மற்றும் வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள மூலவருக்கு 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் என புதிய நோட்டுகளால், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் விழா குழுவினர், கோவில் பூசாரி மனோகரன் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.