ஆடி கடைசி வெள்ளி: கரூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2018 02:08
கரூர்: ஆடி கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு, கரூர் பகுதி அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. சின்னாண்டாங்கோவில் தீர்த்த மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. அம்மனுக்கு, 700 கண் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. ஜவஹர் பஜார் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். பசுபதிபுரம் வேம்பு மாரியம்மன் கோவிலில், அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காந்திகிராமம் மாரியம்மன் கோவிலில், ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.