புதுச்சேரி: அண்ணா நகர் ரேணுகா பரமேஸ்வரி கோவிலில், வரும் 12ம் தேதி ஏகதின லட்சார்சனை நடக்கிறது. புதுச்சேரி அண்ணா நகர் ரேணுகா பரமேஸ்வரி, மீனாட்சி அம்பிகா சமேத சோமசுந்தரரேஸ்வரர் கோவிலில், 21ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா, வரும் 12ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, இன்று 10ம் தேதி காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 12.30 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்சியும், வரும் 12ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், வரும் 13ம் தேதி காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அம்மனுக்கு சவுபாக்கிய சமர்ப்பனம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.