அரிசி – 100 கிராம் கடலைப்பருப்பு – 150 கிராம் தூள் செய்த வெல்லம் – 250 கிராம் தேங்காய் – 1/4 மூடி பால் – 1/4 லிட்டர் ஏலக்காய் – 3 நெய் – 3டேபிள் ஸ்பூன்
* செய்வது எப்படி? அரிசி, கடலைப்பருப்பை தண்ணீரில் இட்டுக் களைந்து தண்ணீர் வடித்த பின் நிழலில் உலர்த்தவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். அளவான தீயில் வாணலியை வைத்து சிறிது நெய்விட்டு காய்ந்தபின் முதலில் தேங்காய்த்துருவலை பொன்னிறமாக வறுத்தெடுத்த பின்னர் அரிசி, பருப்பை சிவக்கும் விதத்தில் வறுத்தெடுக்கவும். களிம்பேறாத பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கும் போது அரிசி பருப்பை போட்டு நன்கு வேக வைக்கவும். பின் வெல்லத்தூளை சேர்த்து கொதித்த பின் பால், ஏலப்பொடி, வறுத்த தேங்காய்த் துருவலை சேர்க்க சுவையான பாயாசம் தயாராகி விடும்.