பதிவு செய்த நாள்
13
ஆக
2018
12:08
சென்னை: தாம்பரம், கடப்பேரி சந்தன முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று, ஆடித் திருவிழா துவங்கியது. அதில், சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மதியம், அன்னதானம் வழங்கப்படும். மாலை, 6:00 மணிக்கு, பதிவிளக்கு பூஜை நடைபெறும். நாளை காலை, 6:00 மணிக்கு, காப்பு கட்டி, 10:00 மணிக்கு, பூங்கரக வீதியுலா நடைபெறும். தொடர்ந்து, தீபாராதனை, கும்ப படையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். சந்தன முத்துமாரியம்மன் ஆடித்திருவிழா நிகழ்ச்சிகளை, முன்னாள் கவுன்சிலர், வேலு மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.