பதிவு செய்த நாள்
16
ஆக
2018
03:08
வீரபாண்டி: பக்தர்கள் வெள்ளத்தில், பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டம், கோலாகலமாக நடந்தது. ஆடித்திருவிழாவை முன்னிட்டு, ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, தீ மிதித்தில் நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், திருமணிமுத்தாற்றில் குளித்துவிட்டு, சக்தி கரகத்துடன், கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது. உற்சவர் அம்மனுக்கு, சிறப்பு பூஜை செய்து, சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச் செய்தனர். ஓம்சக்தி கோஷம் முழங்க, தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்துவந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர், முக்கிய வீதிகள் வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. திரளானோர், அம்மனை தரிசித்தனர். இன்று அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், பூங்கரக ஊர்வலம், நாளை இரவு வண்டி வேடிக்கை, ஆக., 18ல் மஞ்சள் நீராட்டு வைபவத்துடன், ஆடித்திருவிழா நிறைவடையும்.
கஞ்சி கலய ஊர்வலம்: ஆடிப்பூர பண்டிகையை முன்னிட்டு, ஓமலூர், காசிவிஸ்வநாதர் கோவில் அருகேவுள்ள ஆதிபராசக்தி கோவிலில், ஆன்மிக வழிபாடு மன்றம் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம், பூஜை, நேற்று நடத்தது. அதில் பங்கேற்ற பெண் பக்தர்கள், கோவிலில் இருந்து, தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தபடி, கடை வீதி, தர்மபுரி சாலை, சந்தை வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தனர்.