பொம்மிடி: பொம்மிடி அருகே, மழை வேண்டி ஓம்சக்தி கோவிலில் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த பண்டார செட்டிப்பட்டி ஓம்சக்தி கோவிலில், மழை வேண்டி கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சுவாமிக்கு படைக்க, கூழ் எடுத்துச் சென்றனர். அப்போது, மழை பெய்ததால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.