விருதுநகர்: விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயிலில் 49 வது ஆவணி பிரமோற்சவ விழா கொடியேற்றம் நேற்று காலை 9:00 மணிக்கு நடந்தது. சுவாமி திருவிழா மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். ஆக., 25 ம் தேதி வரை விழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாளுடன் பூதவாகனம், கைலாச வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் வந்து அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் டிரஸ்டி ராமதாஸ் செய்தனர்.