கமுதி: கமுதி அருகே குண்டுகுளம் சிவ காளியம்மன் கோயில் கடைசி ஆடி திருவிழாவை முன்னிட்டு 108 பால்குடம், அக்னி சட்டி, முடிக்காணிக்கை, பொங்கல் வைத்தல், சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது. பால்குட ஊர்வலம் பிள்ளையார் கோயிலி லிருந்து துவங்கி முக்கிய வீதிகள், ஊர்காவலன் கோயில் வழியாக சிவகாளியம்மன் கோயில் வரை நடந்தது. அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யபட்டது. நாட்டு கோழிகளை உப்பு போடாமல் சமைத்து, அம்மனுக்கு படையலிடும் பூஜை நடந்தது. ஏற்பாடுகளை குண்டுகுளம் கிராமத்தினர் செய்திருந்தனர்.