பதிவு செய்த நாள்
16
ஆக
2018
03:08
கோவிந்தவாடி: கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலில், அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறை கோவில்களில், பாதுகாப்பு நலன் கருதி, பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக, பாதுகாப்பான முறையில், நெய் விளக்கு ஏற்றுவதற்கு அணையா விளக்கு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியம் கோவிந்தவாடி, குரு பரிகார தலம் என, அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் வளாகம், கைலாசநாதர் சன்னதியில், அணையா விளக்கு நேற்று அமைக்கப்பட்டது.