ராஜபாளையம் : காமி அம்பாள் மற்றும் சிதம்பரேஸ்வரர் சுவாமி கோயில் ஆவணிமூலத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு கொடிமரம், சுவாமிகளுக்கு பால், தயிர், தேன், சந்தனம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சவாமிகள் திருவீதி உலாவும் நடைபெற்றது. சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை (ஆக. 19) நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்தனர்.