பதிவு செய்த நாள்
20
ஆக
2018
12:08
ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை அடுத்த, நொச்சிலி கிராமம் அருகே உள்ளது, எகுமிட்டூர். இந்தக் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் புனரமைப்புப் பணிகள், ஓராண்டாக நடந்து வந்தன. இந்நிலையில் நேற்றுமுன்தினம், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாக சாலை பூஜைகள், 15ம் தேதி துவங்கின. நேற்று முன்தினம் காலை, நான்காம் கால யாகசாலை பூஜைக்குப் பின், புனிதநீர் கலசங்கள், யாகசாலையில் இருந்து கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.காலை, 9:00 மணிக்கு, புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதே சமயத்தில், புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட, விநாயகர், முருகர், கிருஷ்ணர் சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.