பதிவு செய்த நாள்
24
ஆக
2018
01:08
ப.வேலூர்: ப.வேலூர், கந்தநகர் வாரச்சந்தையில் உள்ள வினைதீர்க்கும் விநாயகர், பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் கணபதி, நவகோள், மகாலட்சுமி ஆகிய தெய்வங்களுக்கு வேள்வி, பூர்ணாகுதி நடந்தது. காலை, 9:00 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலை, 5.30 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதற்கால யாகவேள்வி, கோபுர கலசம் வைத்தல் மற்றும் கண் திறப்பு நடைபெற்றது. இன்று அதிகாலை, 4:30 மணிக்கு மேல், இரண்டாம் கால யாக வேள்வி, யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. காலை, 6:00 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் விநாயகர், பாலமுருகன் கோவில் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கவுள்ளது.