பதிவு செய்த நாள்
24
ஆக
2018
01:08
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நந்தி சிலைக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், தயிர், விபூதி, தேன், மஞ்சள் நீர், புஷ்பம், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து கைலாசநாதர் மற்றும் செண்பகவல்லி அம்மன் சுவாமிகளுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை மற்றும் மகாதீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சாணார்பட்டி: ஆவிளிபட்டியில் உள்ள ஆதிசுயம்பீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. நந்தியம் பெருமாளுக்கு காப்பரிசி படைக்கப்பட்டு, கேரள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை நடந்தது. இதேபால் தவசிமடை ஒடுக்கம் மகாலிங்கேஸ்வர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது . சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.