திருப்பரங்குன்றம்: உலக நன்மை வேண்டி மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் அனுஷாதேவி அறக்கட்டளை சார்பில் 1008 விளக்கு பூஜை நடந்தது. கல்லுாரி தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் கோவிந்தராஜன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, உப தலைவர் ஜெயராமன், முதல்வர் நேரு, இயக்குனர் ராஜாகோவிந்தசாமி, அறக்கட்டளை நிர்வாகி மகாலட்சுமி தர்மராஜ் கலந்து கொண்டனர். ஹஸந்திகாவீர் துவக்கி வைத்தார். மன்னர் கல்லுாரி, அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் விளக்கு பூஜையில் பங்கேற்றனர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் காயத்ரிதேவி, மல்லிகா பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.