பதிவு செய்த நாள்
25
ஆக
2018
02:08
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபி ?ஷகம் நடந்தது. மல்லசமுத்திரத்தில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள பெரியமாரியம்மன் கோவிலில், நேற்று கும்பாபி ?ஷகம் நடந்தது. கடந்த, 21 இரவு, 10:00 மணிக்கு கிராம சாந்தியுடன் விழா துவங்கியது. மறுநாள் காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை கணபதி ஹோமம், தீர்த்தக்குடம் எடுத்துவர புறப்படுதல், தெய்வ அனுமதி பெறுதல், விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. 23 காலை, 7:00 மணிக்கு, சுவாமி சிலைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்; நேற்று காலை, 6:30 மணிக்கு சிலைகளுக்கு கங்கணம் கட்டுதல், நான்காம் கால யாக வேள்வி, காலை, 9:30 மணிக்கு விநாயகர், பெரியமாரியம்மன் சுவாமிகளுக்கு கும்பாபி ?ஷகம் நடந்தது.