கோவை;கோவை இஸ்கான் கோவிலில், பலராம் பூர்ணிமா மற்றும் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. கோவை கொடிசியா அருகில் உள்ள இஸ்கான் கோவிலில், கடந்த 21ல், ராதா கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. உற்சவ இறுதி நாளான நேற்று, கிருஷ்ணரின் சகோதரர் பலராமர் அவதரித்த நாளாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று பலராமருக்கு சிறப்பு ஆரத்தி, மகா அபிேஷகம், உபன்யாசம் போன்றவை நடந்தன. மாலையில் ஊஞ்சல் உற்சவம், பிரசாத விருந்து போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய பழங்குடியினர் நல இணை அமைச்சர் சுதர்சன் பகத் பங்கேற்றார்.