பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
ஆர்.கே.பேட்டை: ஆடி பூரம் திருவிழாவை ஒட்டி, செவ்வாடை பக்தர்கள், நேற்று, கஞ்சி கலயங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு படைக்கப்பட்ட கஞ்சியை, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், நேற்று, ஆடி பூரம் திருவிழா கொண்டாடப்பட்டது. காலை, 6:30 மணிக்கு, திருவிழா கொடியேற்றம் கோவில் வளாகத்தில் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, செவ்வாடை தொண்டர்கள், கஞ்சி கலயத்துடன் ஊர்வலமாக புறப்பட்டனர். கங்கையம்மன் கோவில், பொன்னியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் உள்ளிட்ட கிராமத்தின் முக்கிய கோவில்களின் வழியாக வந்த ஊர்வலம், பகல், 12:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மன் கோவிலை வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மகாஆரத்திக்கு பின், பக்தர்களுக்கு கஞ்சி பிரசாதம் ழங்கப்பட்டது. திருவிழாவில், அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.