விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் மழை வேண்டியும், மக்கள் நலம் பெறவும் ஆடிப்பூர பெருவிழா நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து காலை 8:30 மணிக்கு கஞ்சி கலைய ஊர்வலம் துவங்கியது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., சங்கர் துவக்கி வைத்தார்.காலை 10:30 மணிக்கு கஞ்சி வார்த்தல் நடந்தது. காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகத்தை, மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.இதில், இரண்டாயிரம் பெண்கள் கலந்து கொண்டு, கஞ்சி கலையம், தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை சக்தி பீட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.