பதிவு செய்த நாள்
29
ஆக
2018
12:08
சேலம்: ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவன பிரவேசம் செய்த தினத்தை, ஆண்டுதோறும், ஆராதனை தினமாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி, சேலம், சின்னதிருப்பதி, ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில், 347ம் ஆண்டு ஆராதனை விழா, நேற்று கொண்டாடப்பட்டது. காலை முதல், ராகவேந்திரர் சுவாமி பிருந்தாவனத்துக்கு, 108 லிட்டர் பால், பல்வேறு வித வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ராமர் மற்றும் நரசிம்ம சுவாமிக்கு, தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அஷ்டசகஸ்ரநாமம், மகா தீபாராதனை, பக்திப்பாடல்கள், அர்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* சேலம், சின்னக்கடை வீதி, வியாஸராஜ மடத்தில், ராகவேந்திரர் சுவாமியின், 347வது ஆண்டு மஹோத்ஸவ விழா, நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை, சுவாமிக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம், பாதுகா பூஜை, கனகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கவச அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. பின், வீணை, மிருதங்கம், இசை கச்சேரி, தீபாராதனை, திருவீதி உலா நடந்தது. ஏராளமானோர், தரிசனம் செய்தனர். இன்று, சிறப்பு வழிபாடு நடக்கிறது.