பதிவு செய்த நாள்
31
ஆக
2018
01:08
செஞ்சி: பொன்னங்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி தாலுகா பொன்னங்குப்பத்தில் உள்ள முத்துமாரியம்மன், வீரன், அய்யனார், சப்தகன்னி, கங்கையம்மன் கோவில் திருப்பணிகள் செய்து நேற்று ஜீர்னோத்தாரண மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 26ம் தேதி சாமி சிலைகள் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. 27 தேதி விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, கணபதி ஹோமம் நடந்தது. 28ம் தேதி காலை வாஸ்த்து சாந்தி, சிறப்பு யாகமும், மாலை யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடந்தது.
நேற்று காலை 5 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 7.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் 8 மணிக்கு முச்சந்தி விநாயகருக்கு கும்பாபிஷேகமும், 8.30 மணிக்கு வீரன், அய்யனார், கங்கையம்மன், சப்பதகன்னிகளுக்கு கும்பாபிஷேகமும், 9 மணிக்கு முத்தமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக பூஜைகளை செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவில் ஈஸ்வர சிவாச்சாரியார் குழுவினர் செய்தனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர் பாபு உதயசிங் மற்றும் ஊர், நாட்டாமைகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.