பதிவு செய்த நாள்
31
ஆக
2018
01:08
சேலம்: மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலில், கடந்த, 26ல் கணபதி யாகத்துடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை, திருமுறை பாராயணம், வலம்புரி விநாயகர் வழிபாடு, மூலமந்திர ?ஹாமம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடந்தது. காலை, 7:35 மணிக்கு மேல், மூலவர் சன்னதி, பரிவார தெய்வங்கள் சன்னதி கோபுர கலசங்களுக்கு புனிதநீருற்றி, கும்பாபி ஷேகத்தை, சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். அப்போது, திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர். அவர்கள் மீது, புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, அன்னதானம், மூலவர் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. மாலை, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம், திருவீதி உலா நடந்தது.
தீர்த்தக்குட ஊர்வலம்: இடைப்பாடி அருகே, சவுரிபாளையம், விநாயகர், மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. அதை முன்னிட்டு, கல்வடங்கத்திலுள்ள காவிரியாற்றிலிருந்து, திரளான பக்தர்கள், தீர்த்தக்குடங்களை எடுத்து, ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது.