பதிவு செய்த நாள்
01
செப்
2018
11:09
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பட்டானுார் கிராமத்தில், 6 அடி உயர கருங்கல்லால் ஆன, சாயிபாபாவின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, புனித நீர் ஊற்றி வழிபாடு நடந்தது. புதுச்சேரி அடுத்த கோரிமேடு- திண்டிவனம் புறவழிச்சாலையில், பட்டானுார் கிராமத்தில், பழமை வாய்ந்த கருப்புக் கல்லால் வடிவமைக்கப்பட்ட, 6 அடி உயர வழிகாட்டும் சாயிபாபாவின் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து புனித நீர் புறப்பட்டு, விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சாயிபாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது. பால் மற்றும் மங்கள திரவியங்களால், அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விநாயகருக்கு 108 சங்காபிேஷகம், பாபா மாஸ்டர் அருணாசலம் மற்றும் அவரது துணைவியாரால் சாயிபாபாவிற்கு, பால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. சாயி சசி அம்மையார் தலைமையில் 108 பால்குட அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.