தான்தோன்றியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2018 11:09
உத்திரமேரூர் : நெற்குன்றத்தில், தான்தோன்றி அம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது நெற்குன்றம் கிராமம். இப்பகுதியில், 200 ஆண்டுகள் பழமையான தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை பொலிவுடன் புதிய தோற்றத்தில் அமைக்க அப்பகுதியினர் தீர்மானித்ததின் அடிப்படையில், 20 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்றன.பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று, 8:00 மணிக்கு மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக விழாவையொட்டி, கடந்த இரு தினங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் சுற்று வட்டார கிராம பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.