பதிவு செய்த நாள்
01
செப்
2018
11:09
கமுதி: செங்கப்படை அழகுவள்ளி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆக. 20 ல், காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் கோவில் விழா துவங்கியது. ஆக. 21 லிருந்து 27 வரை அம்மனுக்கு அபிேஷகம், ஆராதனை, பக்தர்கள் கும்பம் எடுத்தல் சிறப்பு அபிேஷகங்கள், சிறப்பு பூஜை நடந்தது. ஆக. 28 ல், அம்மனுக்கு 1008 திருவிளக்கு பூஜை, சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதனையடுத்து பொங்கல் வைத்தல், முளைப்பாரி அழைத்தல், அக்னி சட்டி, பால்குடம், பூக்குழி, அலகு குத்துதல், சேத்தாண்டி வேடம், கரும்பு தொட்டில் கட்டுதல் உட்பட நேர்த்தி கடனை பக்தர்கள் நிறைவேற்றினர். பக்தர்கள் சாக்கு பைகளை ஆடைகளாக அணிந்து கொண்டு ஆடிப்பாடி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக அழகு வள்ளி அம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வழிபாடு செய்தனர்.