பதிவு செய்த நாள்
01
செப்
2018
11:09
ஆத்தூர்: ஆத்தூர், மந்தைவெளி, மேல்மாரியம்மன் கோவிலில், 2008ல் தேர்த் திருவிழா நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த, 23ல், சக்தி அழைத்தலுடன் விழா தொடங்கியது. நேற்று மதியம், 2:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரை, பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக, இழுத்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு, தேர், கோவிலை அடைந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.