பதிவு செய்த நாள்
02
செப்
2018
12:09
மாமல்லபுரம்: மாமல்லபுரம், நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், நேற்று துவங்கியது.மாமல்லபுரத்தில், ருக்மணி, பாமா சமேத நவநீத கிருஷ்ணசுவாமி கோவில், பஜனைக் கோவிலாக விளங்குகிறது. கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு, கிருஷ்ணருக்கு, சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடந்து, வாசுதேவ கண்ணன் ஆயர்பாடியில் எழுந்தருளினார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். இம்மாதம், 11ம் தேதி வரை, தினமும், மாலை, 3:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, இரவு, தினம் ஓர் அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.இன்று, ஆலிலைக் கண்ணனாக அருள்பாலித்து, அடுத்தடுத்த நாட்கள் என, வெண்ணைத்தாழி கண்ணன், கோவர்தணகிரி, கண்ணன் ராதை, வேணு கோபால கண்ணன், ஏணிக்கண்ணன், காளிங்க நர்தனம், ஊஞ்சல் கண்ணன், கிருஷ்ண லீலை, குழல் ஊதும் கண்ணன் என, அருள்பாலிக்கிறார்.இறுதி நாளான, 12ம் தேதி, காலை, உறியடிக் கண்ணனுக்கு திருமஞ்சனம்; மாலை, வீதியுலா, உறியடி உற்சவம் நடைபெறும். தினமும், இரவு, 7:00 மணிக்கு, தினம் ஒரு தலைப்பில், உபன்யாசம் நடைபெறும்.