பரிதாபத்தில் பஞ்சபாண்டவர் மலை பாதுகாக்குமா தொல்லியல் துறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2018 12:09
மேலுார்: மேலுார் அருகே கீழ வளவில் பஞ்சபாண்டவர் மலை சிற்பங்கள் தொல்லியல் துறை பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது.இம்மலையில் சமணர் படுக்கைகள், குகைகள் உள்ளன. கி.பி. 2 -11ம் நுாற்றாண்டு வரை சமணர்கள் வழிபாட்டு தலமாக இம்மலை இருந்தது. மலையில் மூன்று தீர்த்தங்கரர் உருவங்கள், குகை தளத்தில் ஆறு தீர்த்தங்கரர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.தவிர பிராமிய கல்வெட்டுக்கள், கல் படிக்கட்டுகளும் உள்ளன. மலை அடிவாரத்தில் விநாயகர், முருகன் கோயில்கள் உள்ளன. இங்கு இன்றும் மக்கள் திருமணம் செய்கின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இம்மலையை பாதுகாக்க பெயரளவில் தொல்லியல் துறை வேலி அமைத்துள்ளதே தவிர முறையான பராமரிப்பு இல்லை. அதனால் சிற்பங்கள் சிதைந்து வருகின்றனர்.செந்தில்குமார்: மெயின் ரோட்டில் இருந்து மலைக்கு செல்லமுடியாத அளவிற்கு பாதைகள் மேடு பள்ளமாக உள்ளதால் மலைக்கு செல்லமுடியவில்லை. மலை மீது ஆபாச வார்த்தைகளை எழுதி உள்ளனர். குகை, மலை சிற்பங்களை தகர கூரையால் பாதுகாக்கப்பட்டிருந்தது. அதை சமூக விரோதிகள் திருடிவிட்டனர். முக்கியத்துவம்வாய்ந்த பஞ்சபாண்டவர் மலை பரிதாபத்தில் உள்ளதால் தொல்லியல் துறைமுறையாக பாதுகாக்க வேண்டும் என்றார்.