பதிவு செய்த நாள்
04
செப்
2018
11:09
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே கொம்பூதியில் கண்ணபிரான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
மூலவர் வெள்ளிக்கவசம், சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 18 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது, நேற்று (செப்., 3ல்) காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, கயிறு இழுக்கும் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், பகல் 1:30 மணிக்கு கண்ணபி
ரான் அழைப்பும், பின்னர் உறியடி உற்ஸவ விழா நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ஏ.எம். செல்வராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் க.சாத்தையா, ஏ.எம். செல்வ ராஜ், சாந்தி, சி. செந்தில், கே. கண்ணாயிரம், ஆர். துரைராஜ், ஏ.ஆர். ரகுபதி அய்யங்கார், கே.ஏ. எஸ். சண்முகராஜ், சந்தோஷ் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கொம்பூதி கிராம
மக்கள், யாதவர் சங்கத்தினர் செய்திருந்தனர்.